×

100 நாள் வேலை கேட்டு பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

திருக்காட்டுப்பள்ளி, டிச. 31: நூறு நாள் வேலை கேட்டு பூதலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய தொழிலாளர்கள், பெண்கள் போராட்டம் நடத்தினர். பூதலூர் ஒன்றிய கிராமங்களில் 100 வேலையை அதிகபட்சமாக 25 நாட்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதை கண்டிப்பது. வேலை செய்தவர்களுக்கு சம்பள பாக்கியை கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்து பூதலூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாய தொழிலாளர்கள், பெண்கள் என 250க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட செயலாளர் கண்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தனர். இந்த தகவல் கிடைத் ததும் ஒன்றிய ஆணையர் சித்ரா சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைவருக்கும் வேலை வழங்கப்படும். சம்பள பாக்கி விரைவில் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. 250 பேர் மீது வழக்கு: இதையடுத்து கொரோனா தடை உத்தரவு அமலில் உள்ள நேரத்தில் கூட்டம் கூட்டியது உள்ளிட்ட பிரிவுகளில் 3 ஆண்கள் உள்ளிட்ட 250 பேர் மீது பூதலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Tags : office ,Puthalur Panchayat Union ,
× RELATED டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில்...